॥ नीतिशास्त्रम् ॥
॥ नीतिशास्त्रम् ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
॥ श्रीः ॥ |
---|
सभाकल्पतरुं वन्दे वेदशाखोपजीवितम् । शास्त्रपुष्पसमायुक्तं विद्वद्भ्रमरशोभितम् ॥ १ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
I salute the Kalpataru tree, which is a congregation of Brāmhaṇās or learned men, that -- a) exists with the branches, which are the Vedas; b) is endowed with the flowers, which are the śāstrās; c) is adorned by the bees, who are the scholars. வேதங்களாகிற கிளைகளுள்ளதும், சாஸ்த்ரங்களாகிற புஷ்பங்களோடு கூடினதும், பண்டிதர்களாகிற வண்டுகளால் ப்ரகாசிக்கப் பெற்றதுமான ஸபை என்கிற கல்பவ்ருக்ஷத்தை (கற்பக மரத்தை) நமஸ்கரிக்கிறேன். வேத சாஸ்த்ரங்களில் மிகவும் தேர்ந்தவர்களான ப்ராம்மண ஸபையை நமஸ்கரிக்கிறேன். प्रणम्य सर्वलोकेशं देवदेवेश्वरं हरिम् । नीतिशास्त्रं प्रवक्ष्यामि सर्वशास्त्रार्थसम्मतम् ॥ २ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Having saluted Hari, the lord of all the worlds, the God of Gods, I expound the Nītiśāstra which fits in with all śāstrās. ஸர்வலோகேஸ்வரனும், தேவாதிதேவனுமான ஸ்ரீமந்நாராயணனை நமஸ்கரித்து, அனைத்து சாஸ்த்ரங்களுக்கும் பொருத்தமான நீதி சாஸ்த்ரத்தைக் கூறுகிறேன். धर्म उवाच । सत्यं माता पिता ज्ञानं धर्मो भ्राता दयाशखा । शान्तिः पत्नी क्षमापुत्रः षडेते मम बान्धवाः ॥ ३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Dharma said - Truth is my mother, knowledge is my father, dharma is my brother, compassion is my friend, peace is my wife and forbearance is my son. These six are my kin. ஸத்யமாகிற தாய், ஞானமாகிற தகப்பன், தர்மமாகிற உடன்பிறந்தோன், தயையாகிற நண்பன், அமைதியான மனைவி, பொறுமையாகிற மகன் ஆகிய இந்த ஆறுபேரும் எனக்கு உறவினர்கள் என்று தர்மர் சொன்னார். भीम उवाच । प्राणं वापि परित्यज्य मानमेवाभिरक्षतु । अनित्यो भवति प्राणो मानस्त्वाचन्द्रतारकम् ॥ ४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Bheema said - Protect honour even by renouncing life. Life is impermanent. Honour lives (forever) until moon and stars exist. தனக்கு மானம்போகக்கூடிய ஆபத்துவந்தபோது ப்ராணனையாவது விட்டு மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். ஏனெனில், ப்ராணன் இந்த சரீரத்தில் அநித்யமாக உள்ளது. மானம் சந்த்ரனும், விண்மீனும் இருக்கும்வரை உள்ளது. अर्जुन उवाच । आमन्त्रणोत्सवा विप्रा गावो नवतृणोत्सवाः । भर्तागमोत्सवो नार्यस्सोऽहं कृष्ण ! रणोत्सवः ॥ ५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Arjuna said - Hey Krishna! - Brahmins, are those who celebrate invitation (feast). - Cows, are those who celebrate fresh grass. - Women, are those who celebrate the arrival of their husbands. - I, am who celebrates the war. கிருஷ்ணா ! சாதாரண ப்ராம்மணருக்கு அழைப்பு (பரான்னம் = விருந்து) சந்தோஷகரமானது, பசுக்களுக்குப் பசும்புல் சத்தோஷகரமானது, பதிவ்ரதைகளுக்கு வெளிநாடு சென்றிருந்த தனது கணவனின் வருகை சந்தோஷகரமானது. யுத்தம் எனக்கு சந்தோஷகரமானது என அர்ஜுனன் சொன்னான். नकुल उवाच । मातृवत्परदारांश्च परद्रव्याणि लोष्टवत् । आत्मवत्सर्वभूतानि यः पश्यति स पश्यति ॥ ६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
One who sees other's wives as mother, other's wealth as stone, and all beings as self, he sees (like a seer). மற்ற பெண்களைத் தாய் போலவும், அடுத்தவர்களுடைய பொன், பொருள்களை கல் போலவும், மன்னுயிர்களைத் தன்னுயிர் போலவும் எவன் பார்க்கிறானோ அவன் ப்ரம்மஞானியாவான் என்று நகுலன் சொன்னான். सहदेव उवाच । अनित्यानि शरीराणि विभवो नैव शाश्वतः । नित्यं सन्निहितो मृत्युः कर्तव्यो धर्मसङ्ग्रहः ॥ ७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Sahadeva said - Bodies are impermanent. Wealth is not permanent. Death is always present nearby. (Therefore), one must acquire merit (by following Dharma, righteousness). சரீரங்கள் அநித்யங்கள், செல்வம் கூட நிலையற்றது, (காலன்) ம்ருத்யுவானவன் எப்பொழுதும் அருகிலிருக்கிறான். ஆகையால் தர்மத்தை சேர்க்கவேண்டும் என்று ஸஹதேவன் சொன்னான். श्रीकृष्ण उवाच । ओदुम्बराणि पुष्पाणि श्वेतवर्णञ्चवायसम् । मत्स्यपादं जलेपश्येन्न नारीहदयस्थितम् ॥ ८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Śrī Kṛṣṇa said - One may see flowers in fig trees, white crow and foot of fish in water, (but) not what is in the heart of a woman. அத்திப்பூவைப் பார்த்தாலும் பார்க்கலாம், வெள்ளைக் காக்கையைக் கண்டாலும் காணலாம், ஜலத்தில் (தண்ணீரில்) மீனின் காலைக் கண்டாலும் காணலாம்; ஆனால் ஸ்த்ரீகளுடைய ஹ்ருதயத்தை மட்டும் அறிய இயலாது என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் கூறினார். श्रीकृष्ण उवाच । दुर्भिक्षे चान्नदातारं सुभिक्षे च हिरण्यदम् । चतुरोऽहं नमस्यामि रणे धीरमृणे शुचिम् ॥ ९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Śrī Kṛṣṇa said - I will salute one who offers food in famine, gold in prosperity, one who is courageous in war, and one who is devoid of debt. பஞ்சமுள்ள காலத்தில் அன்னதானம் செய்பவனையும், சுபிக்ஷமாக (நன்றாக) இருக்கும்பொழுது தங்கம் (பணம்) வழங்குபவனையும், போர்க்களத்தில் தைர்யமுள்ளவனையும், கடன் இல்லாதவனையும் எப்பொழுதும் நான் நமஸ்கரிப்பேன் என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னார். कर्ण उवाच । विप्रहस्ते धनं दद्यात् स्वभार्यासु च यौवनम् । स्वामिकार्येषु च प्राणं निश्चयो मम माधव ! ॥ १० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Karṇa said - Hey Krishna, give wealth in the hands of Brahmins, spend youth with wife, life in service of the Lord. This is my firm conviction. கிருஷ்ணா ! தான் தேடின பொருளை ப்ராம்மணர்களுக்கு வினியோகம் செய்யவேண்டும். யெளவனத்தைத் தன் மனையாளிடத்துக் கழிக்கவேண்டும், தன் ப்ராணனை ஸ்வாமி காரியத்தில் செலவு செய்யவேண்டும் என்பது என்னுடைய கருத்து என்பதாகக் கர்ணன் கூறினான். चाटुवाक्यम् -- सर्वस्य गात्रस्य शिरः प्रधानं सर्वेन्द्रियाणां नयनं प्रधानम् । षण्णां रसानां लवणं प्रधानं भवेन्नदीनामुदकं प्रधानम् ॥ ११ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For the entire body, head is most important. Among all the organs, eye is most important. Among the six tastes, salt is most important. For the rivers, water must be most important. உடல் முழுவதுக்கும் தலை முக்கியமானது. இந்தரியங்களிலும் அனைத்திலும் கண் முக்கியமானது. ஆறு ரஸங்களிலே உப்பு முக்கியமானது. அனைத்து நதிகளுக்கு ஜலம் முக்கியமானது. मृत्पिण्डमेकं बहुभाण्डरूपं सुवर्णमेकं बहुभूषणात्मकम् । गोक्षीरमेकं बहुधेनुजातं एकः परात्मा बहुदेहवर्ती ॥ १२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Though things are very many, the clay in them is the same. Though the ornaments are very many, the gold in them is the same. Though the cows are very many, the milk from them is the same. Similarly, in this manner, one supreme self alone exists in all the bodies. பாண்டங்கள் வெவ்வேறு ஆனாலும் மண் ஒன்றே. ஆபரணங்கள் பல ஆனாலும் பொன் ஒன்றே. பசுக்கள் பலவானாலும் பால் ஒன்றே. அதுபோல சரீரம் பல ஆனாலும் பரமாத்மா ஒருவனே என்று அறியவேண்டும். अर्थातुराणां न गुरुर्न बन्धुः कामातुराणां न भयं न लज्जा । विद्यातुराणां न सुखं न निद्रा क्षुधातुराणां न रुचिर्न पक्वम् ॥ १३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Those who are greedy for wealth, see neither their teacher nor their relatives. Those who are tormented by desire, neither fear nor feel shy. Those who are in the quest for knowledge, neither feel happy nor sleep. Those who are pinched by hunger, neither feel the taste nor bother if the food is well cooked. பணத்தில் ஆசையுள்ளவர்களுக்கு குருவும் இல்லை, உறவினர்களும் இல்லை. காமம் உள்ளவர்களுக்கு பயமும் இல்லை, வெட்கமும் இல்லை. வித்யையில் (படிப்பில்) ஆர்வமுள்ளவர்களுக்கு ஸுகமும் இல்லை, தூக்கமும் இல்லை. பசியுள்ளவர்களுக்கு ருசியும் இல்லை, பக்குவமும் இல்லை. दाता दरिद्रः कृपणो धनाङ्यः पापी चिरायुस्सुकृती गतायुः । राजाकुलीनः सुकुली च भृत्यः कलौ युगे षड्गुणमाश्रयन्ति ॥ १४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
People beget these 6 qualities during Kaliyuga -- 1) A giver of alms becoming poor 2) A poor becoming rich 3) A sinner living long 4) A virtuous dying early 5) A king becoming a servant, and 6) A servant becoming a king. அனைவருக்கும் தர்மம் செய்பவன் தரித்ரனாகுதலும், கருமி தனவானாகுதலும், பாபீ (பாபம் செய்பவர்) நீண்ட ஆயுளையும், நன்மை செய்பவன் குறைந்த ஆயுளை உடையவனாக இருத்தலும், ராஜா வேலையாள் போன்றும், வேலையாள் ராஜாவாகுதலும் ஆகிய இந்த ஆறு குணங்களையும் கலியுகத்தில் ஜனங்கள் அடைகிறார்கள். भार्या वियोगः सुजनापवादः ऋणस्य शेषं कुजनस्य सेवा । दारिद्रयकाले प्रियदर्शनं च विनाग्निना पञ्च दहन्ति कायम् ॥ १५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FIVE, even without fire, burn the body. 1) being separated from wife, 2) censuring good people, 3) what remains of a loan, 4) serving bad people, and 5) visiting relatives at the time of poverty மனைவியைப் பிரிந்து இருத்தலும், நல்லோரை இகழ்தலும், கடனில் மீதம் வைப்பதும், தாழ்ந்த குலத்தோனிடத்தில் வேலை பார்ப்பதும், பணக்கஷ்டமுள்ள நேரத்தில் (பந்துக்களை) உறவினர்களை சென்று பார்ப்பதுமாகிய இந்த ஐந்து செயல்களும் நெருப்பில்லாமலேயே உடம்பை எரிக்கும். पुस्तकं वनिता वित्तं परहस्तगतं गतम् । अथवा पुनरागच्छेत् जीर्णं भ्रष्टा च खण्डशः ॥ १६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Book, woman and money that has gone into the hands of another, is considered gone. Even otherwise if it comes back; book will be torn, girl will be unchaste and money will be in parts. ஒருவருடைய புஸ்தகமும், பெண்ணும், பணமும் பிறரிடம் அகப்பட்டால் போனதே ஆகும். ஒருவேளை திரும்பிவந்தாலும் புஸ்தகம் கிழிந்துபோயும், பெண் சீரழிந்தும், பணம் கொஞ்சம் கொஞ்சமாயும் வரும். आयुर्वित्तं गृहच्छिद्रं मन्त्रौषधसमागमाः । दानमानावमानाश्च नव~गोप्या मनीषिभिः ॥ १७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Lifespan, wealth, flaw in the house, counsel (advice), medicine, friendships (associations), charity, honour and dishonour -- These NINE must be secretly kept by the clever people. ஆயுள், சொத்து (பணம்), குடும்பத்தில் கலகம், மந்த்ரம், ஔஷதம், புணர்ச்சி, தானம், மானம், அவமானம் ஆகிய இந்த ஒன்பதும் புத்திமான்களாலே பிறருக்குத் தெரியாமல் காக்கப்படவேண்டியவைகள். ऋणानुबन्धरूपेण पशुपत्नीसुतालयाः । ऋणक्षये क्षयं यान्ति का तत्र परिवेदना ॥ १८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
By the debt (from the previous birth) one is bound by living creatures, wife (or husband), children and houses. When the debt decays, the bondage also decays. Where is the anguish there? அனைத்து ஜீவராசிகளும், மனைவி (அல்லது கணவன்), பிள்ளைகள், வீடுகள் ஆகிய அனைத்தும் கட்டுப்படுத்தும் (பூர்வஜன்ம) கடன்களின் பயனால் ஏற்படுகின்றன. கடன் தீர்ந்தவுடனே, அவை நாசத்தை அடைகின்றன. எனவே, இவ்விஷயங்களில் கவலைப்படக்கூடாது. दूषकश्च क्रियाशून्यो निकृष्टो दीर्घकोपनः । चत्वारः कर्मचण्डाला जातिचण्डाल उत्तमः ॥ १९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These four are outcast by work (contemptible by work). 1) one who censures others, 2) one who does not do his daily duties, 3) one who is outcast, and 4) one who is angry for a long time. An outcast is better than the one contemptible by work. பிறரை தூஷிப்பவன், நித்யகர்மானுஷ்டானத்தை விட்டவன், புறக்கணிக்கப்பட்டவன், நீண்ட நேரம் கொபம் கொள்பவன் ஆகிய இந்த நால்வரும் கர்மசண்டாளர்கள். இவர்களைக் காட்டிலும் சண்டாளன் உத்தமன். राजवत्पञ्चवर्षाणि दशवर्षाणि दासवत् । प्राप्ते तु षोडशे वर्षे पुत्रं मित्रवदाचरेत् ॥ २० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Treat (your) son like a king for the (first) FIVE years. Treat (your) son like a slave for the (next) TEN years. But when SIXTEEN years is reached, treat (your) son like a friend. குழந்தைகளை ஐந்து வயதுவரை ராஜாவைப்போலவும், மேலும் பத்து ஆண்டுகள் வரை (பதினைந்து வயதுவரை) தாஸனைப்போலவும், பதினாறாவது வயதுமுதல் நண்பனைப்போலவும் நினைத்து நடத்தவேண்டும். एकैका गौस्त्रयस्सिंहाः पञ्च व्याघ्राः प्रसूतिभिः । अधर्मान्नष्टसन्ताना धर्मात्सन्तानवर्धनी ॥ २१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
By the deliveries, cows are born one at a time. In a single delivery, three lions and five tigers would be born. But they lose their young ones due to adharma and the cow's progeny grows due to dharma. பசுக்கள் ஒரு கன்றும், சிங்கம் மூன்று குட்டிகளையும், புலி ஐந்து குட்டிகளையும் ப்ரஸவிக்கின்றன. ஆனால் அதர்மத்தைச் செய்யக்கூடிய சிங்கம் மற்றும் புலியினுடைய குட்டிகள் நாசத்தை அடைகின்றன, தர்மத்தைச் செய்யக்கூடிய பசுவினுடைய கன்றோ நன்கு வளர்கிறது. (தர்மத்தைச் செய்தால் வம்சாபிவிருத்தி ஏற்படும். அதர்மம் செய்தால் வம்சம் அழிந்துகொண்டே வரும்.) बालार्कः प्रेतधूमश्च वृद्धस्त्री पल्वलोदकम् । रात्रौ दध्यन्नभुक्तिश्च आयुः क्षीणं दिने दिने ॥ २२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FIVE reduce the longevity by the day a) bathing in the morning sun, b) inhaling the smoke from a burning corpse, c) marrying a woman elder to oneself, d) drinking water from a pond, e) eating curd rice at night. காலை வெய்யிலில் காய்வதும், பிணத்தின் புகையை சுவாசிப்பதும், தன்னைக் காட்டிலும் வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதும், குட்டை நீரைப் பருகுதலும், இரவில் தயிர் சாதம் சாப்பிடுதலும் ஆகிய இந்த ஐந்தும் மனிதனுடைய ஆயுளை தினம் தினம் குறைக்கும். वृद्धार्को होमधूमश्च बालस्त्री निर्मलोदकम् । रात्रौ क्षीरान्नभुक्तिश्च आयुर्वृद्धिर्दिने दिने ॥ २३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FIVE increase the longevity by the day a) bathing in the evening sun, b) inhaling the smoke from a homa (oblation / sacrifice), c) marrying a woman younger to oneself, d) drinking clean water, e) eating milk rice at night. மாலை வெய்யிலில் காய்வதும், ஹோமப் புகையை சுவாசித்தலும், தன்னைக் காட்டிலும் வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதும், சுத்தமான நீரைப் பருகுதலும், இரவில் பால் சாதம் சாப்பிடுதலும் ஆகிய இந்த ஐந்தும் மனிதனுடைய ஆயுளை தினம் தினம் வளர்க்கும். उत्तमं स्वार्जितं वित्तं मध्यमं पितुरर्जितम् । अधमं भ्रातृवित्तं च स्त्रीवित्तमधमाधमम् ॥ २४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The wealth earned by oneself is most esteemed. The wealth earned from one's father is mediocre. The wealth earned from one's brother is inferior. The wealth earned through a lady is most inferior. தான் தேடிய பொருள் உத்தமம். தகப்பனுடைய பொருள் மத்யமம். உடன் பிறந்தவன் பொருள் அதமம். மனைவி பொருள் அதமாதமம் (அதமத்திலும் அதமம்). उत्तमं कुलविद्याया मध्यमं कृषिवाणिजात् । अधमं सेवकावृत्तिः मृतिश्चौर्योपजीवनम् ॥ २५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Livelihood by specific knowledge, skills, or profession that is traditionally practiced within a family or lineage is most esteemed. Livelihood through agriculture and trade is mediocre. Livelihood being a servant is inferior. Livelihood by stealing is (as good as) death. தன் குலவித்யையால் ஜீவித்தல் உத்தமம். விவசாயம், வியாபாரத்தால் ஜீவித்தல் மத்யமம். வேலைக்காரனாக இருந்து ஜீவித்தல் அதமம். திருடிப்பிழைத்தல் இறந்தவனுக்குச் சமம். उत्तमे क्षणकोपो स्यान्मध्यमे घटिकाद्वयम् । अधमे स्यादहोरात्रं पापिष्ठे मरणान्तकः ॥ २६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
In the best (person), anger lasts only for a moment. In an ordinary (person), it lasts for 48 minutes. In an inferior (person), it lasts for a day and a night. In the most sinful (person), it lasts until death. கோபமானது உத்தமனிடத்தில் க்ஷணப்பொழுதும், மத்யமனிடத்தில் இரண்டு நாழிகையும் (48 நிமிடமும்), அதமனிடத்தில் ஒரு பகலும் இரவும், பாபியினிடத்தில் மரணம் வரையிலும் இருக்கும். आत्मबुद्धिस्सुखञ्चैव गुरुबुद्धिर्विशेषतः । परबुद्धिर्विनाशाय स्त्रीबुद्धिः प्रलयङ्करी ॥ २७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Self-intelligence brings happiness, particularly so when abiding by the advice of a Guru. Abiding by advice of others leads to destruction, and abiding by the advice of women annihilates. தன் புத்தியைக்கொண்டு செயல்பட்டால் ஸுகத்தைத் தரும். குரு (வாக்கு) புத்திமதியின்படி நடந்தால் விசேஷ ஸுகத்தைக் கொடுக்கும். பிறர் புத்திமதி விநாசத்தைக் (அழிவைக்) கொடுக்கும். ஸ்த்ரீ புத்தி ப்ரளயத்தை ஏற்படுத்தும். अतिथौ तिष्ठति द्वारि ह्यपो गृह्णाति यो नरः । आपोऽशनं सुरापानमन्नं गोमांसभक्षणम् ॥ २८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
While keeping the guest waiting at the door, if one drinks water, that water is considered as liquor. The food that the host eats is considered as the meat of the cow. வாசலில் இருக்கும் அதிதியை விட்டுவிட்டு சாப்பாட்டிற்கு முதலில் தீர்த்தம் வாங்குகிறவனுக்கு அந்த வாங்கிய தீர்த்தம் கள்ளுக்குச் சமமாகும். அந்த அன்னம் பசுவின் இறைச்சிக்கு ஒப்பாகும். दर्शनाच्चित्तवैकल्यं स्पर्शनात्तुधनक्षयम् । संभोगात्किल्बिषं पण्यस्त्रीणां प्रत्यक्षराक्षसाम् ॥ २९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
From seeing, arises mental disturbance. From touching, arises the decline of wealth. From indulgence, arises impurity. Harlots are indeed demons manifest before our eyes. விலைமாதரை பார்த்தாலே மதிமயக்கம் ஏற்படும். மெய் தீண்டலால் பணவிரயம் ஏற்படும், அனுபவிப்பதன் மூலம் பாபம் உண்டாகும். எனவே, விலைமாதர்கள் ப்ரத்யக்ஷ ராக்ஷஸிகளாவார்கள். दासी मानधनं हन्ति हन्ति वेश्या धनाधिकम् । आयूंषि विधवा हन्ति सर्वं हन्ति पराङ्गना ॥ ३० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Association with a female slave destroys honour (which is wealth by itself). Association with a prostitute destroys even more wealth. Association with a widow destroys longevity. Association with the wife of another destroys everything. தாஸியின் நட்பு மானத்தை அழிக்கும், விலைமாதரின் நட்பு பணத்தைக் குறைக்கும் (அழிக்கும்), விதவையின் நட்பு ஆயுளைக் குறைக்கும், பிறர் மனைவியின் நட்பு எல்லாவற்றையும் அழிக்கும். दुर्जनं काञ्चनं भेरीं दुष्टस्त्रीं दुष्टवाहनम् । इक्षुखण्डान् तिलान् चोरान् मर्दयेद्गुणवृद्धये ॥ ३१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Wicked people, gold, kettle drum (musical instrument), evil women, sugarcane pieces, sesame seeds and thieves should be beaten to enhance their virtues. துர்ஜனனையும், பொன்னையும், பேரியையும், துஷ்ட ஸ்த்ரீயையும், முரட்டுக் குதிரையையும், கரும்புத் துண்டையும், எள்ளையும், திருடனையும் நற்குண அபிவிருத்தியின் பொருட்டு அடிக்கவேண்டும். न गच्छेद्राजयुग्मं च न गच्छेद्ब्राह्मणत्रयम् । चतुश्शूद्रा न गच्छेयुर्न गच्छेद्वैश्यपञ्चकम् ॥ ३२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Two kṣatriyās, three brāhmaṇās, four śūdrās and five vaiśyās must not go together to accomplish a task. ஒரு காரியத்திற்குப் போகும்பொழுது இரண்டு க்ஷத்ரியரும், மூன்று ப்ராம்மணரும், நான்கு சூத்ரரும், ஐந்து வைச்யரும் போகலாகாது. उषश्शशंसगार्ग्यस्तु शकुनन्तुबृहस्पतिः । मनोजयन्तु माण्डव्यो विप्रवाक्यो जनार्दनः ॥ ३३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
To accomplish a task - Gārgya proclaimed that dawn is the appropriate time, - Bṛhaspati proclaimed that the auspicious or lucky omen must be seen, - Māṇḍavya proclaimed that victory over the mind is sufficient, - Janārdana proclaimed that one may follow the words of the Brahmins. ஒரு காரியத்திற்கு போவதற்கு உஷःகாலம் (உதயத்திற்கு முன்பு) நல்லதென்று கார்க்ய முனிவரும், சகுனம் பார்க்கவேண்டும் என்று ப்ருஹஸ்பதியும், இப்பொழுது போனால் கார்யம் நடக்கும் என்ற மனோதைர்யமே போதுமென்று மாண்டவ்யரும், ப்ராம்மணன் சொல்படி போகலாம் என்று ஜனார்தனரும் சொன்னார்கள். शर्वरीदीपकश्चन्द्रः प्रभातोद्दीपको रविः । त्रैलोक्यदीपको धर्मः सुपुत्रः कुलदीपकः ॥ ३४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The moon is the illuminator of the night, The sun is the illuminator of the morning, Dharma (righteousness) is the illuminator of the three worlds, A virtuous son is the illuminator of the family. இரவை பிரகாசிக்கச் செய்பவன் சந்த்ரன். மதியவேளையைப் (பகல் பொழுதைப்) பிரகாசிக்கச் செய்பவன் சூரியன். மூன்று உலகங்களையும் பிரகாசிக்கச் செய்வது தர்மம். குலத்தை பிரகாசிக்கச் செய்பவன் நல்ல மகன். स बन्धुर्यो हितेषु स्यात् स पिता यस्तु पोषकः । स सखा यस्य विश्वासः सा भार्या यत्र निर्वृतः ॥ ३५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
He who wishes well, is a relative; He who provides sustenance, is a father; In whom there is trust, he is a true friend; Where there is contentment, she is a wife. நன்மையை விரும்புபவனே உறவினன், காப்பாற்றினவனே தகப்பன், விஸ்வாசமுள்ளவனே ஸ்நேஹிதன், ஸுகமுண்டாக்க வல்லவளே மனைவி. अर्थानामार्जने दुःखं आर्जितानाञ्च रक्षणे । नाशे दुःखं व्यये दुःखं किमर्थं दुःखभाजनम् ॥ ३६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
There is difficulty in earning wealth, There is difficulty in protecting earned wealth, There is sorrow in its destruction, and There is sorrow in its expenditure. Why then is there suffering in the pursuit of wealth? பொருட்களை (பணத்தை) சம்பாதிப்பதில் கஷ்டம். சம்பாதித்ததைக் காப்பாற்றுவதில் கஷ்டம். அதன் அழிவிலும் கஷ்டம், செலவிலும் கஷ்டம். எதர்க்காக இந்த கஷ்ட சம்பாதனம்? हरिणापि हरेणापि ब्रह्मणापि सुरैरपि । ललाटलिखिता रेखा परिमार्ष्टुं न शक्यते ॥ ३७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even by Hari (Viṣṇu), even by Hara (Śiva), even by Brahma, and even by the Devās (demi-gods), the fate destined cannot be cleansed. (Therefore, there is nothing that a man can do.) விஷ்ணுவினாலும், சிவனாலும், ப்ரம்மாவினாலும், தேவர்களாலும் தலையெழுத்தைத் துடைக்கமுடியாது. (எனவே, மனுஷ்யர்களால் ஆவது ஒன்றுமில்லை.) घृतेन वर्धते बुद्धिः क्षीरेणायुष्यवर्धनम् । शाकेन वर्धते व्याधिः मांसं मांसेन वर्धते ॥ ३८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
With (appropriate quantity of) ghee, intelligence increases. With (cow's) milk, lifespan increases. With vegetables (not mentioned in śāstrās), diseases increase. With meat, flesh increases. (ஆகாரத்தில் உரிய அளவு) நெய் சேர்த்துக்கொள்வதால் புத்தியும், (பசுவின்) பால் அருந்துவதால் ஆயுளும், (சாஸ்த்ரத்தில் சொல்லப்படாத) காய்கறிகளைச் சாப்பிடுவதால் நோயும், மாமிசம் உண்பதால் மாமிசமும் வளருகின்றன. उत्साहस्साहसं धैर्यं बुद्धिश्शक्तिः पराक्रमः । षडेते यत्र तिष्ठन्ति तत्र देवोऽपि तिष्ठति ॥ ३९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Wherever these SIX qualities exist, the divine presence is also there. 1) enthusiasm or zeal 2) daring courage, boldness, bravery 3) firmness, courage, calmness 4) intelligence or wisdom 5) strength, power 6) valor, prowess சந்தோஷம், ஸாஹஸம், தைர்யம், புத்தி, சக்தி, பராக்ரமம் ஆகிய இந்த ஆறும் யாரிடத்தில் இருக்கின்றதோ அவருக்கு தெய்வத்தின் உதவியும் இருக்கும். असन्तुष्टो द्विजो नष्टस्सन्तुष्टः पार्थिवस्तथा । सलज्जा गणिका नष्टा निर्लज्जा च कुलाङ्गना ॥ ४० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
A brahmin who is discontented is ruined, A kṣatriya who is contented is also ruined, A prostitute who feels ashamed is ruined, A noble woman who has no shame is also ruined. போதும் என்ற மனமில்லாத ப்ராம்மணனும், போதும் என்ற மனமுள்ள கூஷத்திரியனும், வெட்கமுள்ள விலைமாதரும், வெட்கமற்ற குலப்பெண்களும் கெடுவார்கள். वेदमूलमिदं ब्राह्मं भार्यामूलमिदं गृहम् । कृषिमूलमिदं धान्यं धनमूलमिदं जगत् ॥ ४१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For the brahmin, vedās are important, For the home, wife is important, For the grains, agriculture is important, For the world, wealth is important. ப்ராம்மணருக்கு வேதம் முக்கியம், இல்லத்திற்கு மனைவி முக்கியம், தான்யத்திற்கு விவசாயம் முக்கியம், உலகத்திற்கு பணம் முக்கியம். शिलास्थगन्धलेपश्च मार्जालोच्छिष्टभोजनम् । प्रतिबिम्बेक्षणं नीरे शक्रस्यापि श्रियं हरेत् ॥ ४२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even for Indra himself, these (THREE) actions will cause loss of the wealth -- 1) applying the sandalwood paste placed on a stone, 2) eating the food touched by a cat, and 3) watching the reflection of self in water. கல்லின்மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்ளுதலும், பூனை தீண்டிய அன்னத்தைப் புசித்தலும், நீரில் தன் நிழலைப் பார்த்தலும் ஆகிய இவை இந்த்ரனாக இருந்தாலும் (அவர்களுடைய) செல்வத்தைப் போக்கும். आजारजः खररजः तथा संमार्जनीरजः । स्त्रीणां पादरजश्चैव शक्रस्यापि श्रियं हरेत् ॥ ४३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even for Indra himself, these (FOUR) actions will cause loss of the wealth, (if they deposit on someone) -- 1) the dust from the feet of a she-goat, 2) the dust from the feet of a donkey, 3) the dust from the broom-stick, and 4) the dust from the feet of women. ஆட்டின் கால் தூளும் (ஆடு நடக்கும்போது ஏற்படும் புழுதி), கழுதையின் கால் தூளும், விளக்குமாறின் தூளும், பெண்களின் கால் தூளும் (மற்றவர்கள் மீது படிந்தால், அவர்கள்) இந்த்ரனாக இருந்தாலும் (அவர்களுடைய) செல்வத்தைப் போக்கும். कृषितो नास्ति दुर्भिक्षं जपतो नास्ति पातकम् । मौनतः कलहं नास्ति नास्ति जागरतो भयम् ॥ ४४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
There is no famine for the one who farms. There is no sin for for the one who meditates. There is no dispute for the one who is resolved to silence. There is no fear for the one who is ever alert. பயிரிடுபவனுக்கு உணவிற்குப் பஞ்சமில்லை. ஜபம் செய்பவனுக்கு பாபமில்லை. மௌனமாய் இருப்பவனுக்குக் கலகம் இல்லை. தூங்காமல் இருப்பவனுக்குப் பயமில்லை. एकोऽपि गुणवान्पुत्रो निर्गुणैः किं शतैरपि । एकश्चन्द्रः तमो हन्ति नक्षत्रैः किं प्रयोजनम् ॥ ४५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
(Just like,) when one moon can dispel the darkness, what is the use of the numerous stars? (So also,) when one son with good character is enough, what is the use of hundred sons with bad character? நல்ல குணம் நிறைந்த மகன் ஒருவனே போதும். கெட்ட குணங்களுடைய மகன்கள் நூறுபேர்கள் இருந்தாலும் என்ன பயன்? (பயன் ஒன்றுமில்லை). ஒரு சந்த்ரன் இருட்டைப் பொக்கும். எத்தனை நக்ஷத்ரங்கள் இருந்தாலும் என்ன ப்ரயோஜனம்? प्रस्तावसदृशं वाक्यं स्वभावसदृशीं क्रियाम् । आत्मशक्तिसमं कोपं यां जानाति स पण्डितः ॥ ४६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
One who makes statements appropriate to the situation, is a wise man. One whose actions align to his one's own nature, is a wise man. One whose anger is commensurate to his strength, is a wise man. சமய-சந்தர்பத்துக்கு தக்க வார்த்தையம், அவனவனுடைய ஸ்வபாவத்திற்குத் தக்க காரியமும், தன் சக்திக்குத் தக்க கோபமும் எவன் அறிவானோ அவனே பண்டிதன் ஆவான். विवादशीलां स्वयमर्थचोरिणीं परानुकूलां परिहासभाषिणीम् । अग्राशिनीमन्यगृहप्रवेशिनीं त्यजन्ति भार्यां दशपुत्रमातरम् ॥ ४७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even if she is the mother of ten children, a wife is given up - 1) who has a tendency to get into an argument, 2) who steals from her own house, 3) who is favourable or conformable to outsiders, 4) who talks in a ridiculing manner, 5) who eats before her husband takes his food, and 6) who enters other houses. சண்டையிடும் குணமுள்ளவளும், தன் வீட்டு சொத்தையே திருடிவைத்துக் கொள்பவளும், மற்றவர்களுக்கு அனுகூலமானவளும், எப்பொழுதும் பரிஹாஸம் செய்பவளும், கணவன் சாப்பிடுவதற்கு முன்பே ஆஹாரம் சாப்பிடுபவளும், எப்பொழுதும் பக்கத்திலுள்ள வீடுகளுக்குச் செல்பவளும் ஆகிய இப்படிப்பட்ட மனைவியை பத்து குழந்தைகளைப் பெற்றுத்தந்திருந்தாலும் அவளை விடவேண்டும். कार्येषु दासी करणेषु मन्त्री रूपेषु लक्ष्मी क्षमया धरित्री । स्नेहे च माता शयने तु वेश्या षट्कर्मयुक्ता कुलधर्मपत्नी ॥ ४८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The chaste wife, who protects the lineage, is endowed with these SIX intrinsic ethics (dharma) -- 1) a servant in doing work, 2) a minister in giving advice, 3) Goddess Lakṣmī in beauty, 4) mother earth in patience, 5) a mother in friendship and 5) a prostitute in the bed. வீட்டு வேலையில் பணிப்பெண் போலவும், கார்யாலோசனையில் மந்திரி போலவும், ரூபத்தில் மஹாலக்ஷ்மியைப் போலவும், பொறுமையில் பூமிதேவியைப் போலவும், ஸ்நேஹத்தில் தாயைப் போலவும், படுக்கையில் வேசியைப் போலவும் ஆகிய இந்த ஆறு விஷயங்களில் கணவனிடத்தில் நல்ல குலப்பெண்ணானவள் இருப்பாள். न विषं विषमित्याहुर्ब्रह्मस्वं विषमुच्यते । विषमेकाकिनं हन्ति ब्रह्मस्वं पुत्रपौत्रकम् ॥ ४९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
It is told that poison is not poison. The wealth of the Brahmin is poison. Poison kills only one person. The wealth of the Brahmin, when it is stolen from him, kills the children and grandchildren of the thief. விஷம் என்பது விஷமில்லை. ப்ராம்மணனின் உடைமையை விஷம் என்பர். விஷம் ஒரு நபரை மட்டுமே கொல்லும். ப்ராம்மணனின் உடைமைத் திருடியவரின் பிள்ளைகளையும் பேரங்களையும் கொல்லும். शतनिष्को धनाढ्यश्च शतग्रामेण भूपतिः । शताश्वः क्षत्रियो राजा शतश्लोकेन पण्डितः ॥ ५० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
A person possessing 100 gold coins is a wealthy man. A man owning 100 villages is a landlord. A warrior who has 100 horses is a king. A person who knows 100 verses is a learned man. நூறு வராகன் உள்ளவன் பணக்காரன் எனப்படுவான். நூறு க்ராமங்களுக்கு அதிபதியாய் இருப்பவன் பூபதி எனப்படுவான். நூறு குதிரைகளை உடைய க்ஷத்ரியன் ராஜா எனப்படுவான். நூறு ச்லோகங்களை (பழைய முறைப்படி இலக்கணத்தோடு) படித்தவன் பண்டிதன் எனப்படுவான். शकटं पञ्चहस्तेषु दशहस्तेषु वाजिनम् । गजं हस्तसहस्रेण दुष्टं दूरेण वर्जयेत् ॥ ५१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Keep a distance of 5 feet when a cart passes by. Keep a distance of 10 feet from a horse. Keep a distance of 1000 feet from an elephant. Stay as far away as possible from the bad person. வண்டிக்கு ஐந்து முழதூரமும், குதிரைக்குப் பத்து முழதூரமும், யானைக்கு ஆயிரம் முழதூரமும், துஷ்டனுக்கு மிகவும் தூரமாயும் ஓதுங்கிப் போகவேண்டும். अनभ्यासे विषं शास्त्रं अजीर्णे भोजनं विषम् । दरिद्रस्य विषं गोष्ठी वृद्धस्य तरुणी विषम् ॥ ५२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For the one who has not studied well, the scriptures are poison. For one who has not digested, food is poison. For the poor, the company of entertaining friends is poison. For the old man, the young wife is poison. அப்யாஸம் இல்லாதவனுக்கு சாஸ்த்ரம் விஷம். ஜீர்ணமாகாதபோது உணவு விஷம். தரித்ரனுக்கு நல்ல கோஷ்ட்டீ விஷம். கிழவனுக்கு சிறுவயது மனைவி விஷம். जिह्वाग्रे वर्तते लक्ष्मीः जिह्वाग्रे मित्रबान्धवाः । जिह्वाग्रे बन्धनप्राप्तिः जिह्वाग्रे मरणं ध्रुवम् ॥ ५३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
In the tip of the tongue resides Goddess Lakṣmī (symbolizing wealth and prosperity). In the tip of the tongue reside friends and relatives (by sweet speech). In the tip of the tongue lies imprisonment (the bondage of worldly attachments). In the tip of the tongue lies certain death. நாக்கு நுணியினாலேயே சம்பத்து உண்டாகும். நாக்கு நுணியினாலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருவார்கள். நாக்கு நுணியினாலேயே விலங்கு நேரிடும். நாக்கு நுணியினாலேயே மரணம் நேரிடும். अदानदोषेण भवेद्दरिद्रो दारिद्र्यदोषेण करोति पापम् । पापादवश्यं नरकं प्रयाति पुनर्दरिद्रः पुनरेव पापी ॥ ५४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Because of lack of benevolence or charity (in the previous birth), one is born poor. Beacuse of poverty, one commits sins. Beacuse of sins, one inevitably goes to hell. Again, he will be born as a poor man, and again becomes sinful. ஒருவன் முற்பிறப்பில் ஒருவருக்கும் கொடாத தோஷத்தினால் தரித்ரனாகப் பிறக்கிறான். அந்த தாரித்ர தன்மையால் பாபம் செய்கிறான். பாபத்தினால் கண்டிப்பாக நரகம் நேரிடும். அந்த நரகத்திலிருந்து திரும்பவும் தரித்ரனாகப் பிறந்து திரும்பவும் பாபி ஆகிறான். अतिथिर्बालकश्चैव स्त्रीजनो नृपतिस्तथा । एते वित्तं न जानन्ति जामाता चैव पञ्चमः ॥ ५५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FIVE people do not know wealth (i.e., the presence or absence of sufficient money), viz., 1) the guest, 2) the young boy, 3) the women, 4) the king and 5) the son-in-law. விருந்தினர், குழந்தை, பெண்கள், ராஜா, மருமகன் ஆகிய இந்த ஐவரும் பணத்தின் இருப்பையும், இல்லாமையையும் பற்றி அறியமாட்டார்கள். कुदेशञ्च कुमित्रञ्च कुराज्यं च कुबान्धवम् । कुभार्यञ्च कुराष्ट्रञ्च दूरतः परिवर्जयेत् ॥ ५६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Bad state, bad friends, bad kingdom, bad relatives, bad wife and bad country are to be distanced from. அல்ப தேசம், அல்ப ஸ்நேஹிதன், அல்ப ராஜ்யம், அல்ப உறவினன், அல்ப மனைவி, அல்ப பட்டணம் ஆகிய இவைகளை விட்டு விலகிவிடவேண்டும். स्त्रीणां द्विगुणमाहारं बुद्धिश्चापि चतुर्गुणम् । साहसं षड्गुणं चैव कामोऽष्टगुणमुच्यते ॥ ५७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
It is said that women, as compared to men, -- - consume twice the amount of food, - have four times more sharper intellect, - have six times more daring behavior, - have eight times more desire. பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் ஆகாரம் உணவு இரண்டு பங்கும், அறிவு நான்கு பங்கும், திறமை ஆறு பங்கும், ஆசை எட்டு பங்கும் அதிகம் என்றுரைப்பர். राजानं राष्ट्रजं पापं राजपापं पुरोहितम् । भर्तारं स्त्रीकृतं पापं शिष्यपापं गुरुं व्रजेत् ॥ ५८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The sin committed by the people of the nation reaches the king. The sin committed by the king reaches his spiritual guide. The sin committed by the wife reaches the husband. The sin committed by the disciple reaches the teacher. தன் தேசத்தில் ஜனங்கள் (மக்கள்) செய்யும் பாபம் ராஜாவை அடையும். ராஜா செய்யும் பாபம் புரோகிதனை அடையும். பெண்டாட்டி செய்யும் பாபம் புருஷனை அடையும். சிஷ்யன் செய்யும் பாபம் குருவை அடையும். गीते वाद्ये तथा नृत्ते सङ्ग्रामे रिपुसङ्कटे । आहारे व्यवहारे च त्यक्तलज्जस्सुखी भवेत् ॥ ५९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
While singing, while playing any instrument, while dancing, while waging war with a tough enemy, while eating and while conducting business -- the one who has given up shyness will be happy. பாடும்போதும், வாத்யம் வாசிக்கும்போதும், நாட்டியம் ஆடும்போதும், கடுமையான எதிரியுடன் சண்டையிடும்போதும், சாப்பிடும் போதும், வ்யவஹாரம் பேசும்போதும் வெட்கத்தை விட்டவனுக்கு சுகம் கிடைக்கும். रूपयौवनसंपन्ना विशालकुलसंभवाः । विद्याहीना न शोभन्ते निर्गन्धा इव किंशुकाः ॥ ६० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even if a person is endowed with youthfulness and beauty, even if he is born in a big family, the illiterate person will not shine, just like the non-fragrant flowers of the Kinshuk trees. நல்ல அழகும், இளம் வயதும், நல்ல குலத்தில் பிறந்து வசதியாய் இருந்தாலும், படிப்பறிவில்லையெனில் ப்ரகாசிக்கமாட்டார்கள். கிளி மூக்குப் பூவானது எவ்வளவு சிகப்பாகவும், அழகாகவும் இருந்தபோதிலும் வாசனை இல்லாததால் ப்ரகாசிக்காததுபோல. त्यजेदेकं कुलस्यार्थे ग्रामस्यार्थे कुलं त्यजेत् । ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ॥ ६१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
In order to save the family (from trouble), sacrifice one person (who is responsible for that). In order to save the village (from trouble), sacrifice one family (that is responsible for that). In order to save the country (from trouble), sacrifice one village (that is responsible for that). In order to save oneself (from trouble), sacrifice the land (and move away). Alternatively --- For the sake of the oneself (one's own spiritual progress), sacrifice the world. ஒரு குலத்திற்கு கெடு உண்டாகும்பொழுது அதற்குக் காரணமாக உள்ள ஒருவனை விடவேண்டும். ஒரு க்ராமத்திற்கு அழிவு ஏற்படும்பொழுது அதற்குக் காரணமாகவுள்ள ஒரு குலத்தை விடவேண்டும். ஒரு தேசத்திற்கு அழிவு ஏற்படும் பொழுது அதற்குக் காரணமாக உள்ள ஒரு கிராமத்தை விடவேண்டும். தனக்கு தொந்தரவு வரும்பொழுது தனக்குள்ள பூமியை விடவேண்டும். कोकिलानां स्वरो रूपं पातिव्रत्यन्तु योषिताम् । विद्यारूपं विरूपाणां क्षमारूपं तपस्विनाम् ॥ ६२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For the cuckoo birds, the beauty is their voice. For women, the beauty is their chastity. For bad-looking people, the beauty is their knowledge. For the ascetics, the beauty is their forbearance. குயிலுக்குக் குரலும், பெண்களுக்குக் கற்பும், அழகில்லாதவர்களுக்குக் கல்வியும், தபஸ்விகளுக்குப் பொருமையும் அழகாம். दैवाधीनं जगत्सर्वं मन्त्राधीनन्तु दैवतम् । तन्मन्त्रं ब्राह्मणाधीनं ब्राह्यणो मम देवता ॥ ६३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The entire world is governed by destiny or divine will. The deity or divine is governed by the mantra or sacred chants. The mantra is governed by the Brahmins (the one who possesses knowledge of the Vedic scriptures). (Therefore,) Brahmin is my God. உலகம் முழுவதும் தைவத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறது. தைவம் மந்த்ரத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறது. மந்த்ரம் ப்ராம்மணனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. (எனவே) ப்ராம்மணன் எனக்கு தைவம் என்று கூறுகிறார் ஸ்ரீக்ருஷ்ணபகவான். पिबन्ति नद्यः स्वयमेव नांभः खादन्ति न स्वादु फलानि वृक्षाः । पयोधरास्सस्यमदन्ति नैव परोपकाराय सतां विभूतयः ॥ ६४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The rivers do not drink their own water. The trees do not eat their tasty fruits. The clouds do not eat the plants (that grow due to its waters) as well. (In the same manner,) the wealth of the good people are meant to help others. நதிகள் தண்ணீரைத் தானே குடிப்பதில்லை. மரங்கள் பழங்களைத் தானே சாப்பிடுவதில்லை. மேகங்கள் மழை பொழிவித்து விளைவித்த பயிர்களை அவைகளே உண்ணாது. அதுபோல உலகத்திலுள்ள ஸத்புருஷர்களுடைய ஐஸ்வர்யங்கள் (பணங்கள், சொத்துகள்) பரோபகாரத்தின் பொருட்டே ஆகும். पक्षीणां बलमाकाशं मत्स्यानामुदकं बलम् । दुर्बलस्य बलो राजा बालानां रोदनं बलम् ॥ ६५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The strength of the birds is the sky. The strength of the fishes is the water. The strength of the weak person is the ruler. The strength of the children is their cry. பக்ஷிகளுக்கு ஆகாசம் பலம், மீன்களுக்கு நீர் பலம், பலமில்லாதவர்களுக்கு ராஜா பலம், குழந்தைகளுக்கு அழுகை பலம். (காரிய சித்திக்காகக் குழந்தை அழும்.) वृश्चिकस्य विषं पुच्छं मक्षिकस्य विषं शिरः । तक्षकस्य विषं दंष्ट्राः सर्वाङ्गं दुर्जने विषम् ॥ ६६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The tail of the scorpion is poisonous. The head of the fly is poisonous. The teeth of the snake is poisonous. Every part of a bad person is poisonous. தேளுக்குக் கொடுக்கில் விஷம். ஈக்குத் தலையில் விஷம். பாம்பிற்குப் பல்லில் விஷம். துர்ஜனனுக்கு (கெட்டவனுக்கு) உடல் முழுவதும் விஷம். पुस्तकस्था तु या विद्या परहस्तगतं धनम् । कार्यकाले समुत्तपन्ने न सा विद्या न तद् धनम् ॥ ६७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Knowledge that is confined to books and the wealth possessed by someone else's hand, when the time for action arises, is not considered as either knowledge or wealth (since it is not readily available). புஸ்தகத்தில் உள்ள படிப்பும், பிறரிடம் கொடுக்கப்பட்ட காசும் வேளை வரும்பொழுது உதவாத காரணத்தால், அப்படிப்பட்ட படிப்பும் படிப்பல்ல, அப்படிப்பட்ட காசும் காசல்ல. नश्यत्यनायकं कार्यः तथैव शिशुनायकम् । स्त्रीनायकं तथोन्मत्तनायकम् बहुनायकम् ॥ ६८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
A task without a leader will fail. Similarly, a task having a child as a leader will fail. A task having a woman as a leader will fail. Similarly, a task having a mad-person as a leader will fail. A task having many leaders will also fail. யஜமானனில்லாத காரியமும், விஷயம் தெரியாத சிறியவனைத் தலைவராகக் கொண்டு செய்யும் காரியமும், பெண்ணையும், பயித்தியக்காரனையும், பலரையும் யோசனை கேட்டு அனைவரின் யோசனையையும் செயல்படுத்தும் பொருட்டு ஈடுபடும் காரியமும் கெடும். अभ्यासानुसरी विद्या बुद्धिः कर्मानुसारिणी । उद्योगसारिणी लक्ष्मीः फलं भाग्यानुसारिणी ॥ ६९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Knowledge follows practice. Intelligence follows actions. Success/wealth follows diligent effort. Results follow destiny. படிப்பு அப்யாஸத்திற்குத் தக்கதாக இருக்கும். அறிவு கர்மாவிற்கு அனுகுணமாக இருக்கும். செல்வம் ஒருவன் பார்க்கும் வேலையின் பொருட்டு இருக்கும். பலம் பாக்யத்திற்குத் தக்கதாயிருக்கும். वसन्तयौवना वृक्षाः पुरुषा धनयौवनाः । सौभाग्ययौवना नार्यो बुधा विद्यासु यौवनाः ॥ ७० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
In the spring season, trees are at their youth. Men, who possess wealth, are at their youth. Women, who have good fortune, are at their youth. While at learning, scholars are at their youth. மரங்களுக்கு இளமை வஸந்தகாலம்; புருஷனுக்கு இளமை பணம்; பெண்களுக்கு இளமை ஸெளபாக்யம்; பண்டிதர்களுக்கு இளமை படிப்பே. वृथा वृष्टिस्समुद्रेषु च वृथा तृप्तेषु भोजनम् । वृथा धनपतौ दानं दारिद्र्ये यौवनं वृथा ॥ ७१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Rain in the sea is pointless. Offering food to one who is not hungry is pointless. Doing charity to a wealthy person is pointless. Similarly, the youth in a poor person is also pointless. கடலில் மழை பெய்தல் ப்ரயோஜனமற்றது; பசியில்லாதவனுக்கு உணவு போடுதல் ப்ரயோஜனமற்றது; பணக்காரனுக்குத் தானம் செய்தல் ப்ரயோஜனமற்றது; அதைப்போல் தரித்திரனுடைய இளமைப்பருவமும் ப்ரயோஜனமற்றது. अर्था गृहे निवर्तन्ते स्मशाने मित्रबान्धवाः । सुकृतं दुष्कृतञ्चैव गच्छन्तमनुगच्छति ॥ ७२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
His accumulated wealth parts with him in the house itself. His friends and relatives part with him at the cemetery ground. His good deeds and bad deeds are the only ones that (always) follow the person who departs. பணம் வீட்டுடன் நின்றுவிடும்; சுடுகாடுவரை (மகனும்) நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள்; செய்யும் புண்ணியமும், பாவமும் மட்டுமே (எப்பொழுதும்) செல்பவரைப் பின்தொடர்ந்து வரும். (எனவே, தர்மம் செய்யவேண்டும்.) तस्करस्य वधो दण्डो दासीदण्डस्तु मुण्डनम् । भार्यादण्डः पृथक्छय्या मित्रदण्डस्त्वभाषणम् ॥ ७३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For a thief, death is the punishment. For a prostitute, shaving off her hair is the punishment. For a wife, to sleep separately (from her husband) is the punishment. For a friend, to not converse is the punishment. திருடருக்குக் கொலையே தண்டனை, தாஸிக்குத் தலையை மொட்டை அடித்தலே தண்டனை, பெண்டாட்டிக்குத் தனியாகப் படுப்பதே தண்டனை, நண்பனுக்குப் பேசாமலிருப்பதே தண்டனை. पिता च ऋणवान् शत्रुर्माता च व्यभिचारिणी । भार्यारूपवती शत्रुः पुत्रश्शत्रुरपण्डितः ॥ ७४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
For a person, the following (FOUR) are enemies -- 1) A father, who leaves a debt for the son to clear 2) A mother, who is involved in immoral activities 3) A wife, who is not beautiful 4) A son, who is not learned கடன் வைத்த தகப்பன் எதிரி; நடத்தை தவறிய தாய் எதிரி; அழகற்ற மனைவி எதிரி; படிக்காத பிள்ளை (தகப்பனாருக்கு) எதிரி. पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने । रक्षन्ति वार्धके पुत्रा न स्त्री स्वातन्त्र्यमर्हति ॥ ७५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Father protects the girl during her childhood. Husband protects her during youth. Sons protect her during her old age. Woman do not deserve to be by themselves (they must always be protected). பெண்களை குழந்தைப் பருவத்தில் தகப்பனாரும், இளமைப் பருவத்தில் கணவனும், முதுமை காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுவர்கள். எனவே, ஒருபொழுதும் பெண்கள் தனியாக இருக்கக்கூடாது. अग्निहोत्रं गृहं क्षेत्रं गर्भिणीं वृद्धबालकौ । रिक्तहस्तेन नोपेयाद्राजानं दैवतं गुरुम् ॥ ७६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
One should not go empty-handed when visiting -- - a place where अग्निहोत्रं ( homa) is being performed, - another person's house, - a pilgrim center, - a pregnant lady, - an old person, - a child, - a king, - a temple and - a guru. அக்னிஹோத்ரம் செய்கின்ற இடத்திற்குச் செல்லும்பொழுதும், ஒரு வீட்டிற்க்குச் செல்லும்பொழுதும், புண்ய க்ஷேத்திரத்திற்குச் செல்லும்பொழுதும், கர்ப்பிணி, வயதானவர், சிறுவர், ராஜா, தெய்வ ஆலயம், குரு ஆகியோரைக் காணச்செல்லும்பொழுதும் வெறுங்கையோடு (ஒன்றுமில்லாமல்) செல்லக்கூடாது. மாறாக அக்னிஹோத்ரம் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்றால் சமித்தும் (அரசங்குச்சியும்) மற்ற இடங்களுக்குச் செல்லும் பொழுது பழம் முதலியவைகளுடனும் செல்லவேண்டும். अहो ! प्रकृतिसादृश्यं श्लेष्मणो दुर्जनस्य च । मधुरैः कोपमायाति कटुकैरुपशाम्यति ॥ ७७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Alas! There is a similarity in the nature of phlegm and a bad person. Just like phlegm gets agitated with sweet, and subsides with bitterness; so does a bad person get angry or aggressive with sweet words, and subsides with harsh words. கெட்டவனுக்குக் கபமானது ஸமமானதாக இருக்கும். எப்படியெனில், கபமானது இனிப்பு சாப்பிடுவதால் வளர்ச்சியையும், கசப்பு சாப்பிடுவதால் அழிவையும் எப்படி அடையுமோ அப்படி கெட்டவனானவன் நல்ல வார்த்தைகளால் கோபத்தையும்; கடுஞ்சொற்களால் அமைதியையும் அடைவான். जनिता चोपनीता च यश्च विद्यां प्रयच्छति । अन्नदाता भयत्राता पञ्चैते पितरः स्मृताः ॥ ७८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FIVE are to be remembered as fathers -- 1) the biological father 2) the person who did the upanayana karma 3) the one who gives knowledge 4) the person who provides food 5) the person who protects from fear தன்னைப் பெற்றவனும், உபநயனம் செய்வித்தவனும், படிப்பித்தவனும், உணவளித்துக் காப்பாற்றியவனும், பயத்தை ஒழித்தவனும் ஆகிய இந்த ஐவரும் பிதாக்கள் ஆவார்கள். दरिद्राय कृतं दानं शून्यदेवालयार्चना । अनाथप्रेतसंस्कारमश्वमेधसमं विदुः ॥ ७९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Know that these are equivalent to the performance of the Aśvamedha yajña -- - the charity done to person in poverty, - the worship done to an unattended temple, and - the cremation of the body of an orphan ஏழைக்குக் கொடுக்கும் தானமும், பூஜையில்லாத கோயிலுக்குப் பூஜை செய்ய ஏற்பாடு செய்தலும், திக்கற்ற பிணத்திற்கு ஈமக்ரியைகளைச் செய்தலுமாகிய இவை மூன்றும் அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமமாகும். दातृत्वं प्रियवक्तृत्वं धीरत्वमुचितज्ञता । अभ्यासेन न लभ्यन्ते चत्वारस्सहजा गुणाः ॥ ८० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These FOUR qualities are in-born, and cannot be obtained through sheer practice -- 1) charity, 2) kindness in speech, 3) valour and 4) knowledge of the appropriate (good and bad action) ஈகையும், அன்பானசொல்லும், தைரியமும், நன்மை-தீமைகளை அறியும் அறிவும் ஆகிய இந்த நான்கும் தன்னுடன் பிறந்த குணங்களாகவே இருக்கவேண்டுமேயன்றி கற்றுக்கொண்டு வருவதல்ல. अभ्युक्त्वामलकं पथ्यं भुक्त्वा तु बदरीफलम् । कपित्थं सर्वदा पथ्यं कदली न कदाचन ॥ ८१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
It is appropriate to consume - gooseberry, before eating food - jujube fruit, after eating food - wood-apple fruit, at all times - banana is not considered as a pathyam food at any time. Note -- pathyam (पथ्यम्) is the appropriate digestible food recommended for specific body conditions. வெறும் வயிற்றில் நெல்லிக்காயும், சாப்பிட்ட பிறகு இலந்தைப் பழமும், எப்பொழுது விளாம்பழம் புசித்தாலும் சரீரத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும். வாழைப்பழம் ஒருபொழுதும் பத்தியமாகாது. श्लोकार्धेन प्रवक्ष्यामि यदुक्तं ग्रन्थकोटिभिः । परोपकारः पुण्याय पापाय परपीडनम् ॥ ८२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
I will tell in half a verse, what has been told in crores of scriptures. 1) Helping others will result in merit. 2) Troubling others will result in sin. பல நீதி மற்றும் தர்மசாஸ்த்ர நூல்களில் சொல்லப்பட்ட விஷயத்தை நான் இந்த அரை ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறேன். அதாவது மற்றவர்களுக்கு உதவி செய்தால் புண்ணியமும், தொந்தரவு செய்தால் பாவமும் ஏற்படும். दुष्टभार्या शठं मित्रं भृत्योऽहङ्कारसंयुतः । ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥ ८३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
(These FOUR) are (equal to) death itself. There is no doubt. -- 1) Wicked wife, 2) dishonest friend, 3) arrogant servant, and 4) living alongside a snake in the house. கெட்ட மனைவி, நேர்மையற்ற நண்பன், அஹங்காரமுள்ள வேலைக்காரன், பாம்பு உள்ள வீட்டில் வசித்தல் ஆகிய இவை ஒருவனுக்கு நிச்சயம் மரணத்தை உண்டாக்கும். यस्मिन् देशे न सन्मानो न प्रीतिर्न च बान्धवाः । न विद्या नास्ति धनिका न तत्र दिवसं वसेत् ॥ ८४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Do not live even for a day, in a country -- 1) where there is no respect, 2) where there is no love, 3) where there are no relatives, 4) where there is no knowledge, and 5) where there are no wealthy men. எந்த தேசத்தில் மரியாதயும், ப்ரியமும், உறவினர்களும், படிப்பும், பணக்காரரும் இல்லையோ அவ்விடத்தில் ஒருநாள்கூட வசிக்கக்கூடாது. अग्निहोत्रफला वेदा दत्तभुक्तफलं धनम् । रतिपुत्रफला दाराश्शीलवृत्तफलं श्रुतम् ॥ ८५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Agnihotra is the fruit of (learning) the Vedās. Charity and enjoyment are the fruits of having wealth. Love and children are the fruits of having a wife. Leading a disciplined life is the fruit of (learning) the scriptures. வேதாத்யானம் செய்வதற்கு அக்னிஹோத்ரம் செய்தலும், பணம் இருப்பதற்கு தானங்களும், போகங்களும்; மனைவி இருப்பதற்கு ஸம்போகம், குழந்தைகளும்; சாஸ்த்ரங்களைக் கேட்டதற்கு ஆசாரமுடையவனாக இருப்பதும் பலமாகும். स्वगृहे पूज्यते मूर्खः स्वग्रामे पूज्यते प्रभुः । स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते ॥ ८६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
An idiot is respected in his house only. A landlord is respected in his town. A king is respected in his kingdom. A wise man is respected everywhere. தன் வீட்டில் மட்டும் மூர்க்கனும்; தனது க்ராமத்தில் மட்டும் ப்ரபுக்களும் (பணக்காரர்களும்); தனது தேசத்தில் மட்டும் ராஜாவும்; வித்வான் (நல்ல படிப்பறிவுடையவர்) எல்லா இடத்திலும் பூஜிக்கப்படுவர். कुचेलिनं दन्तमलापहारिणं बह्वाशिनं निष्ठुरवाक्यभाषिणम् । सूर्योदये चास्तमये च शायिनं विमुञ्चति श्रीरपि चक्रपाणिनम् ॥ ८७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Even if the person is equal in character to her husband, Śrī Mahāviṣṇu, having Sudarśanacakra in his hand (Cakrapāṇi), Śrī Lakṣmī, the goddess of wealth, will leave a person -- 1) who wears dirty clothes, 2) who does not brush his teeth, 3) who eats a lot, 4) who speaks harsh words, and 5) who sleeps during sunrise and sunset. அழுக்காடை உடுப்பவனும், பல் துலக்காதவனும், பெரும் திண்டிக்காரனும், கடுஞ்சொற்களையே சொல்லுபவனும், ஸூர்யோதய காலத்திலும் (காலையிலும்), ஸூர்ய அஸ்தமன காலத்திலும் (மாலையிலும்) தூங்குகிறவனும் ஆகிய இவர்கள் மற்ற குணங்களால் விஷ்ணுவிற்குச் சமமானாலும் அவர்களை விட்டு லக்ஷ்மிதேவியானவள் நீங்குவாள். दीर्घशृङ्गमनङ्वाहं निर्लज्जां विधवां स्त्रियाम् । शूद्रमक्षरसंयुक्तं दूरतः परिवर्जयेत् ॥ ८८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These are to be kept at a distance -- 1) the bull having long horns, 2) the widow devoid of shyness, and 3) an educated man of the fourth varṇa நீண்ட கொம்புள்ள எருதையும், வெட்கமற்ற விதவையையும், படிப்புள்ள சதுர்த்தனையம் தூரத்திலேயே விடவேண்டும். मुखं पद्मदलाकारं वचश्चन्दनशीतलम् । हृत्कर्तरीसमं चातिविनयं धूर्तलक्षणम् ॥ ८९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The characteristics of a cunning and dishonest person are -- 1) face that appears as lustrous as lotus petals, 2) speech that is as cool as the sandalwood paste, 3) heart that is as sharp as a pair of scissors, and 4) extreme exhibition of humility தாமரை இதழ்போல் முகப்பொலிவும், ஸ்ரீகந்தம்போல குளிர்ந்த வார்த்தையும், கத்தரிக்கோல் போன்ற மனதும், அளவிற்கு அதிகமான அடக்கமுள்ளவன்போல் இருப்பதும் ஆகிய இவை அனைத்தும் நேர்மையற்றவனுக்கு (கெட்டவனுக்கு) லக்ஷணங்களாகும். मातृहीनशिशुजीवनं वृथा कान्तहीननवयौवनं वृथा । शान्तिहीनतपसः फलं वृथा तिन्त्रिणीरसविहीन भोजनम् ॥ ९० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
All these are useless -- 1) the life of a child without a mother, 2) the youth of a girl without a husband, 3) the fruit of penance that lacked peace, and 4) the food that lacks the tamarind taste . தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும், கணவனில்லாத யௌவனமும், அமைதியில்லாத தவத்தின் பயனும், புளியில்லாத உணவும் வீண் ஆகும். वस्त्रमुख्यस्त्वलङ्कारः प्रियमुख्यन्तु भोजनम् । गुणमुख्या भवेन्नारी विद्यामुख्यस्तु ब्राह्मणः ॥ ९१ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Attire is essential for good decoration. Kindness is paramount for a good meal. Good qualities are important in a woman. Knowledge is critical for a Brahmin. அலங்காரத்திற்குத் துணிகளும், போஜனத்திற்கு அன்பும், ஸ்த்ரீகளுக்கு குணமும், ப்ராம்மணனுக்குப் படிப்பும் முக்கியமாம். अमृतं सद्गुणा भार्या अमृतं बालभाषितम् । अमृतं राजसन्मानममृतं मानभोजनम् ॥ ९२ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
A wife with good qualities is nectarine. The words spoken by an infant is nectarine. A gift given by the king is nectarine. The food earned honourably is nectarine. குணவதியான பெண்ணும், சிறுவர்களுடைய மழலைச் சொல்லும், ராஜஸந்மானமும், மானம் குன்றாமல் சம்பாதித்த போஜனமும் ஆகிய இவை அனைத்தும் அம்ருதத்திற்கு ஒப்பானதாகும். दुर्वृत्तो वा सुवृत्तो वा मूर्खः पण्डित एव वा । काषायदण्डमात्रेण यतिः पूज्यो न संशयः ॥ ९३ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
A sanyāsī has to be respected the moment he dawns a saffron robe and the stick (indicating his initiation into sanyāsa), even if he is a man with bad practices or a man with good practices or an idiot or a scholar. There is no doubt (about this). ஒரு யதியானவர், கெட்ட ஆசாரமுள்ளவரானாலும், நல்ல ஆசாரமுள்ள வரானாலும், முட்டாளானாலும், பண்டிதரானாலும், காஷாய தண்டங்களைத் தரித்ததால் பூஜிக்கத் தகுந்தவராவார். இதில் ஐய்யமில்லை. उपकारेण नीचानामपकारो हि जायते । पयः पानं भुजङ्गानां केवलं विषवर्धनम् ॥ ९४ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
Only harm will arise out of any help done to bad people. The milk given to snake turns into poison only. பாம்புக்குப் வார்த்தப்பால் எப்படி அதன் விஷத்தை அதிகமாக்குமோ அப்படி நீசருக்கு செய்த உபகாரம் கண்டிப்பக அபகாரமாக ஆகிவிடும். ऋणं याच्ना च वृद्धत्वं जारचोरदरिद्रता । रोगश्च भुक्तशेषश्चाप्यष्टौ कष्टाः प्रकीर्तिताः ॥ ९५ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These EIGHT difficulties are said to exist -- 1) loan, 2) begging, 3) old age, 4) lover of a married woman, 5) stealing, 6) poverty, 7) disease and 8) having to eat the left-overs. கடன், யாசித்தல், மூப்பு, வ்யபிசாரம், திருட்டுத்தனம், ஏழ்மை, நோய், மற்றும் மற்றவர்கள் சாப்பிட்டு மிகுந்த (மீதமுள்ள) சாப்பாட்டைச் சாப்பிடும் நிலை ஆகிய இவை எட்டும் கஷ்டங்கள் என்று சொல்லப்படுகிறது. दासी भृत्यस्सुतो बन्धुर्वस्तुर्वाहनमेव च । धनधान्यसमृद्धिश्चाप्यष्टभोगा प्रकीर्तिताः ॥ ९६ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These EIGHT enjoyments are said to exist -- 1) maid servants, 2) (male) servants, 3) children, 4) relatives, 5) things, 6) vehicles and also 7-8) prosperity in terms of wealth and grains பணிப்பெண்கள், பணியாட்கள், பிள்ளைகள், சுற்றத்தார்கள், பொருட்கள், வாகனங்கள், பணம், தான்யம் இருத்தல் ஆகிய இவை எட்டும் போகங்கள் என்று சொல்லப்படுகிறது. मक्षिका मारुतो वेश्या याचको मूषकस्तथा । ग्रामणीर्गणकश्चैव सप्तैते परबाधकाः ॥ ९७ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
These SEVEN always trouble others, viz., -- 1) housefly, 2) windy storm, 3) prostitute, 4) beggar, 5) mouse, 6) the village head and 7) the accountant. ஈக்கள், காற்று, வேசி, யாசகன், எலி, கிராமாதிகாரி, கணக்கர் ஆகிய ஏழுபேரும் எப்பொழுதும் மற்றவர்களைத் தொந்தரவு செய்பவர்கள். भूप्रदक्षिणषट्केन काशीयात्रायुतेन च । सेतुस्नानशतैर्यच्च तत्फलं मातृवन्दने ॥ ९८ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The merit gained out of circumambulating the world six times, going on pilgrimage to Kashi ten thousand times, taking bath in the river many hundred times, is got by adoring one's mother. ஆறுமுறை பூமியை வலம் வருதலும், பத்தாயிரம் முறை காசிக்கு செல்வதும், அனேக நூறுமுறை சேது ஸ்நானம் (அதாவது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடல்) செய்தலும் ஆகிய இவற்றால் கிடைக்கக்கூடிய பலன், பெற்றெடுத்த தாயை அன்போடு ஒருமுறை நமஸ்கரித்தாலே கிடைக்கும். नान्नोदकसमं दानं न द्वादश्याः परं व्रतम् । न गायत्र्याः परं मन्त्रं न मातुर्दैवतं परम् ॥ ९९ ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
There is no charity that is equal to food and water. There is no vowed observance (austerity) that is greater than the ekādaśī/dvādaśī fasting. There is no mantra that is superior to the Gāyatrī mantra. There is no God greater than one's own mother. உணவு, நீர் ஆகிய தானத்திற்குச் சமமான தானமும் இல்லை. த்வாதசி விரதத்தைக் காட்டிலும் வேறு விரதமும் இல்லை., காயத்ரியைவிட சிறந்ததான மந்திரமும் இல்லை. தாயினும் உயர்ந்த தைவமும் வேறில்லை. राजवत्पुत्रदाराश्च स्वामिवन्मित्रबान्धवाः । आचार्यवत्सभामध्ये भाग्यवन्तं स्तुवन्ति हि ॥ १०० ॥
पदविच्छेदम्
अन्वयः
सर्वेऽपि
The prosperous person is certainly adored -- - like a king, by his wife and children, - like a master, by his friends and relatives, and - like a teacher, in a congregation of learned men. உலகத்தில் பணக்காரனை அவன் பெண்டாட்டி பிள்ளைகள் ராஜாபோலவும், சுற்றத்தாரும், ஸ்நேகிதரும் தேவர் போலவும்; ஸபையிலுள்ளோர் ஆசார்யனைப் போலவும் நினைத்துத் துதிப்பர். (பணமுள்ளவனே பெரியவன் என்றபடி.) |
Comments
Post a Comment